V-United Kayal City Champions 2018 : Under 14 Schedule!

வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : Knight Riders அணி கோப்பையை வென்றது!
ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகடமி கிளப் சார்பாக காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானத்தில் 10ஆம் ஆண்டு வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி முதல் மின்னொளியில் நடைபெற்றது.
இத்தொடரில், Knight Riders, Yankees, V2, Kayal Chelsea, Kayal Express, Canton thunders, Le'ma Sports, Fi-Sky Sporting, Yousuf United, Faams, Janseva மற்றும் Madrid Juniors ஆகிய 12 அணிகள் பங்கேற்றன. இவ்வணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிசுற்றுக்கும் தேர்வு செய்யப்பட்டன. இதனடிப்படையில் அரையிறுதிக்கு Knight Riders மற்றும் Yankees அணிகள் தகுதிபெற்றன. தகுதிசுற்றிக்கு V2, Le'ma Sports, Kayal Chelsea மற்றும் Faams அணிகள் தேர்வாகின. அப்போட்டிகளில் வெற்றிபெற்ற Kayal Chelsea அணி Knight Riders அணியுடனும், V2 அணி Yankees அணியுடனும் அரையிறுதிப் போட்டியில் விளையாடின. அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற Knight Riders மற்றும் Yankees அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினராக, குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் 7 முறை தங்கப்பதக்கத்தை வென்றவரும், தெற்குஆசிய விளையாட்டு போட்டியில் ஒருமுறை தங்கப்பதக்கத்தை வென்றவரும், உலக ரயில்வே துறைக்கு இடையிலான போட்டியில் ஒருமுறை தங்கப்பதக்கத்தை வென்றவருமான திருமதி. நிக்கோலஸ் லதா அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னதாக வயதுமூத்தோர் (Veterans) பங்கேற்ற கால்பந்து காட்சிப்போட்டியும், இளைஞர்கள் (Under 14) பங்கேற்ற கால்பந்து காட்சிப்போட்டியும் நடைபெற்றது. இறுதிப்போட்டி துவங்குவதற்கு முன்னர், சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு இரண்டு அணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் Knight Riders அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் துவக்கமாக ஹாஃபிழ் முஜாஹித்அலி இறைமறை வசனத்தை ஓதினார், ஹாஃபிழ் எஸ்.கே. சாலிஹ் வரவேற்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினர் அவர்களுக்கு சகோ. அபூபக்கர் அவர்கள் சால்வை வழங்கினார்கள். நடுவர்கள், மைதானம் உருவாக உழைத்தவர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். பின்னர் சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்தவர்களுக்கான தனிநபர் பரிசுகளும், அணிக்கான காசோலை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இறுதியாக சகோ. ஜஹாங்கிர் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை சகோ. ஹாஃபிழ் எஸ்.கே. சாலிஹ் தொகுத்து வழங்கினார்.
ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானத்தை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் KAM முஹம்மது அபூபக்கர் திறந்துவைத்தார்!
ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக காயல்பட்டினம் கடற்கரைக்கு அருகில் காயல்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் மர்ஹூம் ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை அவர்களின் பெயரில் புதிய மைதானம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தின் திறப்புவிழா கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இதனை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், காயல் மண்ணின் மைந்தனுமான ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் திறந்துவைத்தார்கள்.
இத்திறப்புவிழாவிற்கு ஹாஜி வி.எம்.எஸ். அமீன் அவர்கள் தலைமைதாங்கினார்கள், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் திரு. சம்பத், வாவு ஆப்தீன் ஹாஜி, ஜனாப். எம்.ஐ.பஷீர், ஜனாப். எஸ்.எம். ரஃபீ, ஜனாப். சதக்தம்பி, ஜனாப். வாவு எம்.எம். சம்சுத்தீன் ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.
நிகழ்வின் துவக்கமாக வாவு அம்ரு இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து ஜனாப். லரீஃப் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் திரு. சம்பத், ஜனாப். சதக்தம்பி, ஜனாப். எஸ்.எம். ரஃபீ, ஜனாப். எஸ்.ஏ.கே. மெய்தீன், ஜனாப். சலாஹூத்தீன், ஜனாப். இப்னு சவூத், ஜனாப்.துளிர் சேக்கனா லெப்பை, வழக்கறிஞர் ஜனாப். அஹமது மற்றும் சிறப்பு விருந்தினர் ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் 10ஆம் ஆண்டு வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிக்கான அணிகளின் ஜெர்ஸிகள் அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வும், இம்மைதானம் அமைப்பதற்கு உழைத்தவர்கள் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சிகளை சகோ. லரீஃப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 1ஆம் தேதி மாலை நடைபெற்றது.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இறுதிப் போட்டியில் Yousuf United அணியும் Diamond Spark அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Diamond Spark அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ARR கோப்பையை தட்டிச்சென்றனர்.
அதனையடுத்து நடைபெற்ற ஜுனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் Knight Riders அணியும், Smile Soccers அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Smile Soccers அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ARR கோப்பையை தட்டிச்சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆறுமுகனேரி காவல் துறை ஆய்வாளர் திரு. சம்பத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வின் துவக்கமாக ஹாஃபிழ் B. ஹிஸாம் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை ஜஹாங்கிர் வழங்கினார். நிகழ்வின் தொடராக சிறப்பு விருந்தினர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து நடுவர்கள் இஸ்மாயீல், ஜமால், போட்டி ஒருங்கினைப்பாளர் ஆசிரியர் மீரா தம்பி ஆகியோர்களுக்கும், வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்குமுனைந்த சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு அணி வீரர்களுக்கும் தனிநபர் பரிசுகள் மற்றும் அணிக்கான கோப்பை, காசோலை வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை சிறப்பு விருந்தினர் திரு. சம்பத் அவர்கள், ஜனாப். L.K.K. லெப்பைத் தம்பி அவர்கள், ஜனாப். அமீன் அப்பா அவர்கள் மற்றும் போட்டியின் ஒருங்கினைப்பாளர் சகோ. ஆசிரியர் மீராதம்பி ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரைக்குப்பின் தேசியகீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டிக்கான ஏற்பாடுகளை வீ-யூனைடெட் குழுமத்தின் ஆலோசனையின் கீழ், அலி ஃபைஸல், ஆசிரியர் மீராதம்பி, ஆசிரியர் இஸ்மாயில் மற்றும் ஜஹாங்கிர் உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது.
இன்று (30/04) மாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் Faams அணியும், Smile Soccers அணியும் விளையாடின. போட்டி நேரம் முழுவதும் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், போட்டி சமநிலையில் முடிவுற்றது. பின்னர் நடைபெற்ற சமநிலை முறிவு முறையில் Smile Soccers அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Smile Soccers அணியின் Asfaq தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் LTS GA Soccers அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் Knight Riders அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Knight Riders அணியின் Khaja தேர்வு செய்யப்பட்டார்.
இவ்வெற்றியின் மூலம் Knight Riders அணியும், Smile Soccers அணியும் இன்ஷாஅல்லாஹ் நாளை (01/05) மாலை 05:15 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்கள். முன்னதாக சப்ஜூனியர்ஸ் பிரிவின் இறுதிப்போட்டி Yousuf United அணிக்கும், Diamond Spark அணிக்குமிடையே 04:45 மணிக்கு நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியை தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கு முன்னர் பரிசளிப்புவிழா முடிவுறும் என்பதனை கால்பந்து ரசிகர்களுக்கு அறியத்தருகிறோம். எனவே இளம் வீரர்கள் அசத்தவிருக்கும் இறுதிப் போட்டியினை ஆரம்பம்முதல் கண்டுகளிக்கவும், இளம் வீரர்களை உற்சாகப்படுத்தவும் அன்போடு அழைக்கிறது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது. லீக்சுற்றின் இறுதி ஆட்டங்கள் இன்று (29/04) நடைபெற்றது.
காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Kayal Manchester அணியும், Soccer Smashers அணியும் விளையாடின. இப்போட்டியில் Soccer Smashers அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Soccer Smashers அணியின் Fayaz தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதலாவது காலிறுதி போட்டியில் Hameed Stars அணியும் Veera அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Hameed Stars அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Veera அணியின் Zuhair தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது காலிறுதி போட்டியில் Muhyideen Rainers அணியும் Kayal United அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Kayal United அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal United அணியின் Yasin தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Muhyideen Rainers அணியும், Faams அணியும் விளையாடின. இப்போட்டியில் Faams அணியினர் 2 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Muhyideen Rainers அணியின் Uzair தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Knight Raiders அணியை எதிர்த்து LTS GA Soccers அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் LTS GA Soccers அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக LTS GA Soccers அணியின் Naveen தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Smile Soccers அணியும் Yousuf United அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Muthu தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதலாவது அரைறுதி போட்டியில் Kayal United அணியும் Diamond Spark அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Diamond Spark அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இரண்டாவது சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது அரைறுதி போட்டியில் Hameed Stars அணியும் Yousuf United அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Yousuf United அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
நாளை (30/04) மாலை 4:45 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் Faams அணியினர்களை எதிர்த்து Smile Soccers அணியினர்கள் விளையாட உள்ளார்கள்.
மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் Knight Riders அணியினர்களை எதிர்த்து LTS GA Soccers அணியினர்கள் விளையாட உள்ளார்கள்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது.
இன்று (28/04) காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் LTS GA Soccers அணியும், Smile Soccers அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக LTS GA Soccers அணியின் Yahya தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Hameed Stars அணியும் Kayal United அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal United அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal United அணியின் Yasin தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Muhyideen Rainers அணியும், Yousuf United அணியும் விளையாடின. இப்போட்டியில் Yousuf United அணியினர் 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Husaim தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Knight Raiders அணியை எதிர்த்து Soccer Smashers அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Knight Raiders அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Knight Raiders அணியின் Adhil தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Faams அணியும் Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Faams அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal Manchester அணியின் Seyed Mohames தேர்வு செய்யப்பட்டார்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது.
இன்று (27/04) காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Yousuf United அணியும், Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal Manchester அணியின் Noufal தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Kayal United அணியும் Yousuf United அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Rahmathullah தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Smile Soccers அணியும், Knight Raiders அணியும் விளையாடின. இப்போட்டியில் Knight Raiders அணியினர் 2 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Knight Raiders அணியின் Bisthami தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Muhyideen Rainers அணியை எதிர்த்து Soccer Smashers அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Muhyideen Rainers அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Muhyideen Rainers அணியின் Buhary தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் TGJ Soccers அணியும் Kayal United அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal United அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal United அணியின் Kabeer தேர்வு செய்யப்பப்பார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Faams அணியும் LTS GA Soccers அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Faams அணியின் Seyed Mohames தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்யில் Yousuf United அணியும் Hameed Stars அணியும் விளையாடின. இப்போட்டியில் Yousuf United அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Naveeth தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் மூன்றாவது போட்யில் Veera அணியும் Diamond Spark அணியும் விளையாடின. இப்போட்டியில் Diamond Spark அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்யில் Yousuf United அணியும் Hameed Stars அணியும் விளையாடின. இப்போட்டியில் Yousuf United அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Naveeth தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் மூன்றாவது போட்யில் Diamond Spark அணியும் Veera அணியும் விளையாடின. இப்போட்டியில் Diamond Spark அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 துவங்கின.
இன்று (26/04) காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் LTS GA Soccers அணியும், Muhyideen Rainers அணியும் விளையாடின. இப்போட்டியில் LTS GA Soccers அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Muhyideen Rainers அணியின் Buhary தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Yousuf United அணியும், Faams அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Jalal தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Knight Riders அணியை எதிர்த்து Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Knight Riders அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Knight Riders அணியின் Shamsudeen தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Diamond Spark அணியும் Danub Coolers அணியும் விளையாடின. இப்போட்டியில் Diamond Spark அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Diamond Spark அணியின் Fouzan தேர்வு செய்யப்பப்பார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Soccer Smashees அணியும் Smile Soccers அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Smile Soccers அணியின் Mohamed Ali தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்யில் Veera அணியும் Muhyideen Rainers அணியும் விளையாடின. இப்போட்டியில் Veera அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Veera அணியின் Yahya தேர்வு செய்யப்பட்டார்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 துவங்கின.
இன்று (25/04) காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Soccer Smashers அணியும், Faams அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. Faams அணிக்காக Hasan மற்றும் Soccer Smashers அணிக்காக Musthq ஆகியோர் கோலடித்தார்கள். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசினை Faams அணியின் Waseem பெற்றார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Smile Soccers அணியும், Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Smile Soccers அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Smile Soccers அணியின் Assaf தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் LTS GA Soccers அணியை எதிர்த்து Yousuf United அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக LTS GA Soccers அணியின் Mohamed Afif தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் TGJ Soccers அணியும் Yousuf United அணியும் விளையாடின. இப்போட்டியில் Yousuf United அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Khalji தேர்வு செய்யப்பப்பார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Knight Riders அணியும் Muhyideen Rainers அணியும் விளையாடின. இப்போட்டியில் Knight Raiders அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக Aadil கோலடித்தார். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Knight Raiders அணியின் Ameer தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்யில் Hameed Stars அணியும் Kayal Unites அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal United அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal United அணியின் அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் நேற்று (23/04) துவங்கின.
இன்று (24/04) காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Smile Soccers அணியும், Muhyideen Rainers அணியும் விளையாடின. இப்போட்டியில் Smile Soccers அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரராக Smile Soccers அணியின் Althaf தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Faams அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் Faams அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். அந்த அணிக்காக ஃபரீத் மூன்று கோல்களை அடித்தார். இப்போட்டியின் சிறந்த வீரராக Faams அணியின் ஃபரீத் தேர்வு செய்யப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் LTS GA Soccers அணியை எதிர்த்து Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Kayal Manchester அணியின் K.M. Ibrahim தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Danube Coolers அணியும் Veeras அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Veeras அணியின் Mohdoom Naina தேர்வு செய்யப்பப்பார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Yousuf United அணியும் Soccer Smashers அணியும் விளையாடின. இப்போட்டியில் Soccer Smashers அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக Fayaz கோலடித்தார். இப்போட்டியின் சிறந்த வீரராக Mustaq தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்யில் Muhyideen Rainers அணியும் Diamond Spark அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்த நிலையில் சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Diamond Spark அணியின் அப்துல் கஃப்பார் தேர்வு செய்யப்பட்டார்.
ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் நேற்று (23/04) துவங்கின.
முன்னதாக காலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Yousuf United அணியை எதிர்த்து Knight Riders அணியினர் விளையாடினார்கள். இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Danube Coolers அணியும் Mohideen Rainers அணியும் விளையாடின. இப்போட்டி கோல்ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் LTS GA Soccers அணியும் Soccer Smashers அணியும் விளையாடின. இப்போட்டியில் LTS GA Soccers அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக ஃபயாஸ் கோலடித்தார்.
மாலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Smile Soccers அணியும், Faams அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Smile Soccers அணியின் Haneefa Mujahideen தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்டியில் Kayal United அணியும், Yousuf United அணியும் விளையாடின.
இப்போட்டியில் Kayal United அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக Kayal United அணியின் இத்ரீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
சப்ஜுனியர்ஸ் பிரிவின் இரண்டாவது போட்டியில் TGJ Soccers அணியும், Hameed Stars அணியும் விளையாடின.
இப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரராக ஆக்கிஃப் அலி தேர்வு செய்யப்பட்டார்.
ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Muhyideen Rainers அணியும், Kayal Manchester அணியும் விளையாடின.
இப்போட்டியில் Muhyideen Rainers அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
அந்த அணிக்காக உஸைர் ஒரு கோலடித்தார். இப்போட்டியின் சிறந்த வீரராக ஷாம்சிகாப்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
துவக்க நாள் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் கால்பந்து வீரர் சகோ. அன்சாரி, சகோ. சேக் மற்றும் ஆசிரியர் திரு. ஆனந்தகூத்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் எல்லாம் வல்ல இறைவனின் துணையுடனும், நமது ஊரின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடனும் கடந்த 9 ஆண்டுகளாக வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
10ஆம் ஆண்டு சீனியர் பிரிவு கால்பந்து போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் நோன்பு பெருநாளுக்கு மறுதினம் மின்னொளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதனை கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
10ஆவது ஆண்டை முன்னிட்டு எமது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்து காணலாம்.
Video 1 : https://www.youtube.com/watch?v=TPsFWMUlggo
Video 2 : https://www.youtube.com/watch?v=HBnDNR5unQk
https://www.youtube.com/watch?v=LoKCoiSR2bY
https://www.youtube.com/watch?v=fIhcs6PX8uM
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக காயல்பட்டினம் விளையாட்டு வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், விளையாட்டு திறமையை மேம்படுத்தவும் கடந்த 10 ஆண்டுகளாக வல்ல இறைவனின் துணையோடும், காயல்பட்டினத்தின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவோடும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்போடும் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வருடம் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் புதிய முயற்சியாக 13 வயதுக்குற்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாகவும், 15 வயதுக்குற்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாகவும் நடத்த திடமிடப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
இரண்டு பிரிவிளும் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த பலதினங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அணிகளுக்கிடையேயான பயிற்சி போட்டிகள் நேற்று (24/03) முதல் நடைபெற்று வருகின்றது.
இந்த அணிகளுக்கிடையேயான காயல் பிரிமியர் லீக் போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் பள்ளிகளின் ஆண்டிருதித்தேர்வு நிறைவடைந்ததும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே நகரின் கால்பந்து ரசிகர்கள் இப்போட்டிகளை காணவருவதோடு, இளம் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு, வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
We are United by Sports என்றமுழக்கத்துடன், எல்லாம்வல்ல இறைவனின்துணையோடு 2001ஆம் ஆண்டு முதல் ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் வீரர்களிடையே ஒற்றுமையையும், விளையாட்டு திறமையும் மேம்படுத்தும் விதமாக காயல்பட்டினம் மற்றும் காங்காங்கில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கேரம், Bowling, Snooker, இறகுப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளை காயல்பட்டினத்தின் விளையாட்டு மைதானங்களின் ஒத்துழைப்போடு சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எமது V-United Sports சார்பில் நடத்திவருகின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹாங்காங்– சிம்ஷாசேய்-ல் அமைந்துள்ள துர்க்கி உணவகத்தில் மதியம் விருந்துடன் காயலர்களின் சங்கம நிகழ்விற்கு எமது V-United குழுமத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திகழ்வில் சிறுவர்கள், பெரியவர்கள் என 84 நபர்கள் பங்கேற்றனர். இந்த விருந்துபசரிப்பிற்கு முன்னதாக, சென்ற வருடத்தின் சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதன்விபரம்வருமாறு…
இந்நிகழ்வின் துவக்கமாக இறைமறை வசனத்தை ஹாஃபிழ் அப்துல் கஃப்ஃபார் ஓதினார்கள்.
அதனைத் தொடர்ந்து 2017ஆம்ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் (Life Time Achievement) விருதினை எமது V-United கால்பந்து அணியின் பயிற்சியாளரும், வீரருமான S.H. ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டின் இளம் வீரருக்கான விருதினை மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.
முதலாவதாக, பேங்காங்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரருக்கான பரிசினை பெற்ற அப்துல் கஃப்ஃபாருக்கு (Rising Star) வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, Rising Star விருதினை இன்ஸாஃப் இத்ரீஸ் பெற்றார்.
மூன்றாவதாக, Rising Star Junior விருதினை அஃப்ரஸ்-க்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நம்பிக்கைக்குறிய வீரர் (promising player) விருது இரண்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
முதலாவதாக, promising player விருதினை U. சம்சுத்தீன்-க்கு வழங்கப்பட்டது.
இரண்டாவதாக promising player விருதினை ஃபுஜைல்-க்கு வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வின் இறுதியாக, எமது V-United குழுமத்தின் அனைத்து பணிகளிலும் முழு ஈடுபாட்டோடு தன்னை அர்பணித்து, எங்களது குழுமத்தின் முதுகெலும்பாக திரைமறைவில் இருந்து செயல்படும் சகோ. A. அஹமது தஸ்லீம் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு குழுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளுக்கான அணுசரனையை V-United Forex, சகோ. United Asia Exchange அர்ஷத், சகோ. Faams M,F. சாலிஹ் மற்றும் சகோ. V2000 M.A. செய்யது அஹமது ஆகியோர் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து சகோ. S. இஸ்மாயில் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். நிகழ்ச்சிகளை பொறியாளர் சகோ. செய்யது அஹமது அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக ஹாஃபிழ் சுல்தான் அவர்களின் துஆ-விற்கு பின்னர், மதியஉணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் எல்லாம் வல்ல இறைவனின் துணையுடனும், நமது ஊரின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடனும் கடந்த 9 ஆண்டுகளாக வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
10ஆம் ஆண்டு சீனியர் பிரிவு கால்பந்து போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் நோன்பு பெருநாளுக்கு மறுதினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதனை கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறியத்தருகின்றோம்.
10ஆவது ஆண்டை முன்னிட்டு எமது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்து காணலாம்.
Video 1 : https://www.youtube.com/watch?v=TPsFWMUlggo
Video 2 : https://www.youtube.com/watch?v=HBnDNR5unQk
கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் மற்றும் கேரம் போட்டிகளில் காயல்பட்டினம் வீரர்களின் திறமையை மெருகேற்றவும், வீரர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 10 ஆண்டுகளாக காயல் பிரிமியர் லீக் என்ற பெயரில் போட்டிகளை நடத்தி வருகின்றது.
அதன் வரிசையில் இவ்வாண்டும், கோடைவிடுமுறையை இளம் வீரர்கள் குதூகளத்துடன் கொண்டாட வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் 13 வயதுக்குற்பட்ட வீரர்களுக்கு (சப்ஜூனியர்) பிரத்தியேகமாகவும், 15 வயதுக்குற்பட்ட (ஜூனியர்) வீரர்களுக்கு பிரத்தியேகமாகவும் இரண்டு பிரிவுகளாக கால்பந்து போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் நடத்தவுள்ளது.
சப்ஜூனியர் போட்டிகளில் பங்கேற்க 2005ஆம் ஆண்டோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களும், ஜூனியர் பிரிவில் பங்கேற்க 2003ஆம் ஆண்டோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்களாம். ஒரு வீரர் ஒரு பிரிவில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்.
இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள வீரர்கள் விண்ணப்பங்களை ஐசிஐசிஐ வங்கி அருகில் அமைந்துள்ள அல்தாஃப் எண்டர்பிரைசஸில் பெற்று, பூர்த்திசெய்து அங்கேயே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் அணிகளுக்கான உரிமையாளர்களும் வரவேற்க்கப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு...
அலி ஃபைஸல் ... 00852 97540095, தஸ்லீம் ... 00852 97431898, ஜவஹர் ... 9840676767, சொளுக்கு முஹம்மது தம்பி ... 9600430657 மற்றும் ஜஹாங்கிர் ... 9171776763.
சிவகாசியில் வினோத்குமார் நினைவு முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியில் காயல்பட்டணம் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பங்கேற்றது. அந்த அணி அரையிறுதிப் போட்டியில் சிவகாசி அணியும் வீ-யூனைடெட் அணியும் விளையாடின இதில் ஆட்டநேர இறுதிவரை இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனையடுத்து நடைபெற்ற சமநிலை முறிவுமுறையில் சிவகாசி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிவகாசி அணியும், மதுரை ஐவர் கால்பந்து அணியும் விளையாடின. இதில் மதுரை அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை வென்றனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவகாசி காவல்துறை ஆய்வாளர் திரு. S. கண்ணன் அவர்களும், ஸஃபாரி நிறுவன குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. A. குணசேகரன் ஆகியோர் பங்கேற்று பெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்கள். வீ-யூனைடெட் அணியின் கோல் கீப்பர் அபூ சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.
"ARR கோப்பைக்கான" வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2017 : கால்பந்து போட்டிகளின் ஐந்தாம் சுற்று முடிவுகள்!!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR கோப்பைக்கான" காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 02/05 அன்று காலை முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
முதல் 7 சுற்றுகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ள இச்சுற்றுப்போட்டியின் ஐந்தாம் நாளான இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் Bangkok Ball Blaster அணியும், Janseva அணியும் விளையாடின.
இப்போட்டியில் Bangkok Ball Blaster அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் 5Sky Sporting அணியும், Knight Riders அணியும் விளையாடின.
இப்போட்டியில் Knight Riders அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Kayal Express அணியும், Canton Thunders அணியும் விளையாடின.
இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியில் V2000 அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின.
இப்போட்டியில் Kayal Chelsea அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியின் சிறந்த வீரராக Bangkok Ball Blaster அணியின் ஃபர்ஹான், இரண்டாவது போட்டியில் Knight Riders அணியின் அஸார், மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Canton Thunders அணியின் ஹாமீத் மற்றும் இரண்டாவது போட்டியில் Kayal Chelsea அணியின் உஸாமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த வீரர்களுக்கு பதக்கமும், PHM ரெஸ்டாரன்டில் ரூபாய் 200 மதிப்புள்ள சிக்கன் பெறுவதற்கான பரிசு கூப்பனும் வழங்கப்பட்டது. இதற்கான அனுசரனையை PHM சிக்கன் ரெஸ்டாரன்ட் மற்றும் bi3 நிறுவனத்தினர்கள் வழங்குகிறார்கள்.
ஐந்தாம் சுற்று முடிவில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளின் விபரம் வருமாறு...
"ARR கோப்பைக்கான" வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2017 : கால்பந்து போட்டிகளின் நான்காம் சுற்று முடிவுகள்!!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR கோப்பைக்கான" காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 02/05 அன்று காலை முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
முதல் 7 சுற்றுகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ள இச்சுற்றுப்போட்டியின் நான்காம் நாளான இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் V2000 அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் Knight Riders அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் Canton Thunders அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Chelsea அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Bangkok Ball Blaster அணியும், 5Sky Sporting அணியும் விளையாடின. இப்போட்டியில் 5Sky Sporting அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது போட்டியில் Kayal Express அணியும், Janseva அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Express அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் knight Riders அணியின் வீரர் ஜிஜித், இரண்டாவது போட்டியில் Kayal Chelsea அணியின் அக்கீல், மாலை நடைபெற்ற முதல் போட்டியில் 5Sky Sporting அணியின் அஹமது மற்றும் இரண்டாவது போட்டியில் Kayal Express அணியின் ஹனீஃபா ஆகியோர் சிறந்த வீரருக்கான பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பதக்கமும், ரூபாய் 200 மதிப்புள்ள PHM சிக்கனும் பெறுவதற்கான கூப்பனும் வழங்கப்பட்டது. இப்பரிசுகளுக்கான அனுசரனையை bi3 மற்றும் PHM ரெஸ்டாரன்ட் நிறுவனத்தினர்கள் வழங்குகிறார்கள்.
நான்காம் சுற்று முடிவில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளின் விபரம் வருமாறு...
"ARR கோப்பைக்கான" வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2017 : ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றது!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR கோப்பைக்கான" காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 02/05 முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டிகளில் ஒவ்வொரு நாளும், சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பதக்கமும் ரூபாய் 200 மதிப்புள்ள PHM சிக்கன் பெறுவதற்கான கூப்பனும் வழங்கப்படுகின்றது. இந்த பரிசுகளை PHM ரெஸ்டாரன்ட் மற்றும் bi3 நிறுவனத்தினர்கள் வழங்குகிறார்கள்.
முதல் போட்டியில் இருந்து இன்றுடன் முடிவடைந்த 12 போட்டிகளில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
"ARR கோப்பைக்கான" வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2017 : கால்பந்து போட்டியின் மூன்றாம் சுற்று போட்டி முடிவுகள்!!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR கோப்பைக்கான" காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 02/05 முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
முதல் 7 சுற்றுகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ள இச்சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (03/05) காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5Sky Sporting அணியும், Kayal Express அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுபெற்றது.
இரண்டாவது போட்டியில் Bangkok Ball Blaster அணியும், Vilak 2000 அணியும் விளையாடின. இப்போட்டியில் Bangkok Ball Blaster அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
நேற்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Kayal Chelsea அணியும், Knight Raiders அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுபெற்றது.
இரண்டாவது போட்டியில் Janseva அணியும், Canton Thunders அணியும் விளையாடின. இப்போட்டியில் Canton Thunders அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
மூன்றாம் நாளான இன்று (04/05) காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் Janseva அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Chelsea அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் Knight Riders அணியும், Kayal Express அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிபளும் தலா ஒருகோல்போட்ட நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவுபெற்றது.
இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Bangkok Ball Blaster அணியும், Canton Thunders அணியும் விளையாடின. இப்போட்டியில் Bangkok Ball Blasters அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது போட்டியில் 5Sky Sporting அணியும், V 2000 அணியும் விளையாடின. இப்போட்டியில் V2000 அணியினர் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இப்போட்டித் தொடரில், 5Sky Sporting, Knight Riders, Kayal Express, Bangkok Ball Blaster, Vilak 2000, Kayal Chelsea, Janseva மற்றும் Canton Thunders ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
மூன்றாம் சுற்று முடிவில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளின் விபரம் வருமாறு...
"ARR கோப்பைக்கான" வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2017 : கால்பந்து போட்டிகள் இன்று (02/05) துவங்கின! முதல் சுற்று போட்டி முடிவுகள்!!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR கோப்பைக்கான" காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று காலை (02/05) முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் துவங்கியது.
முதல் 7 சுற்றுகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ள இச்சுற்றுப்போட்டியின் முதல் ஆட்டத்தில் Canton Thunders அணியும், V2000 அணியும் விளையாடின. இப்போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலைபெற்றது.
இரண்டாவது போட்டியில் Bangkok Ball Blaster அணியும், Kayal Express அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Knight Riders அணியும், Janseva அணியும் விளையாடின. இப்போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலைபெற்றது.
இரண்டாவது போட்டியில் Kayal Chelsea அணியும், 5Sky Sporting அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Chelsea அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டித் தொடரில், 5Sky Sporting, Knight Riders, Kayal Express, Bangkok Ball Blaster, Vilak 2000, Kayal Chelsea, Janseva மற்றும் Canton Thunders ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் சுற்று முடிவில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளின் விபரம் வருமாறு...
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR" கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 5Sky Sporting, Knight Riders, Kayal Express, Bangkok Ball Blaster, Vilak 2000, Kayal Chelsea, Janseva மற்றும் Canton Thunders ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இப்போட்டியின் முதல் 7 சுற்றுகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ளது. அதன் இறுதியில் அதிக புள்ளிகளை பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும், இறுதிப்போட்டி இன்ஷாஅல்லாஹ் மே மாதம் 11ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் விபரம் அணி வாரியாக பின்வருமாறு...
Faams கோப்பைக்கான வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் கால்பந்து 2017 : Muhiydeen Rainers அணியினர் கோப்பையை வென்றனர்!
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் 22/04 முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
இச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (27/04) மாலை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் Muhyideen Rainers அணியும், Soccer Smashers அணியும் விளையாடின.
இப்போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் Muhyideen Rainers அணியின் வீரர் முத்து தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கினார். பின்னர் முதல்பாதி ஆட்ட முடியும்வரை Soccer Smashers அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.
முதல்பாதி ஆட்டத்தின் இடைவேலையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முஹியத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் திரு. இரத்தினசாமி அவர்களுக்கும், ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் தலைவர் மர்ஹூம் L.கனி அவர்களின் மகன் ஜனாப். லெப்பைத் தம்பி அவர்களுக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான ஜனாப். U.முஹம்மது ஷேக்கான லெப்பை அவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தார்கள். தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவதுபாதி ஆட்டத்தில் Soccer Smashers அணியினர்கள் கோல் அடிப்பதற்கு எடுத்த முயற்சிகளை Muhyideen Rainers அணியினர்கள் முறியடித்தனர். ஆட்டநேர இறுதிவரை போராடிய Soccer Smashers அணியினரால் கோல் ஏதும் அடிக்கமுடியாததால் Muhyideen Rainers அணியினர்கள் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று "V-United Juniors Leauge 2017” பட்டத்தையும், "FAAMS" கோப்பையையும் தட்டிச்சென்றனர்.
போட்டிகள் சிறப்புடன் நடைபெற்று முடித்திட உதவிபுறிந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிகள் நடத்த மைதானம்தந்துதவிய ஐக்கிய விளையாட்டுச் சங்க நிர்வாகத்தினருக்கும், அணிகள் தந்துதவிய உரிமையாளர்கள் ஜனாப். சாலிஹ் (FAAMS), ஜனாப். இஸ்மாயில் (Soccer Smashers), ஜனாப்.முத்து மொகுதூம் (Afinah Honesters), ஜனாப். சல்மான் (Kayal Manchester), ஜனாப். இஸ்ஸத்தீன் (Hameed Stars), ஜனாப். ஷஃபீக் (PAK HK), திரு. பிரேம் (Kayal Kings), ஜனாப். அப்துல் பாஸித் (Muhyideen Rainers) ஆகியோர்களுக்கும், அணிகளின் பொறுப்பாளர்களாக செயல்பட்ட ஆசிரியர் ஜனாப். மீராதம்பி (FAAMS), ஜனாப். சதக்கதுல்லாஹ் (Soccer Smashers), ஜனாப். தாவூத் (Afinah Honesters), ஜனாப். ஃபாஸி (Kayal Manchester), ஜனாப். ரிஃபாய்தீன் (Hameed Stars), ஜனாப். அபுசாலிஹ் (PAK HK), ஜனாப். அஸார் (Kayal Kings) மற்றும் ஜனாப். சம்சுத்தீன் (Muhyideen Rainers)ஆகியோர்களுக்கும், நடுவர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் ஜனாப். மீராதம்பி, ஜனாப். ஜமால், ஜனாப். இஸ்மாயில் ஆகியோருக்கும், அனைத்து போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கும், கோல் போஸ்ட் தந்துதவிய கோமான் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நிர்வாகிகளுக்கும், போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடன் இணையதங்களில் வெளியிட்ட இணையதள நிர்வாகிகளுக்கும், எங்களுடன் இணைந்து களப்பணியாற்றிய அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
Faams கோப்பைக்கான வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் கால்பந்து 2017 : Soccer Smashers மற்றும் Muhyideen Rainers அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி!
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் 22/04 முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று (26/04) மாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் Soccer Smashers அணியும் Hameed Stars அணியும் விளையாடின.
இப்போட்டியில் Soccer Smashers அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் Muhyideen Rainers அணியும் Kayal Manchester அணியும் விளையாடின.
இப்போட்டியில் Muhyideen Rainers அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இன்ஷாஅல்லாஹ் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் Soccer Smashers அணியினரை எதிர்த்து Muhyideen Rainers அணியினர் விளையாட உள்ளார்கள்.
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் 22/04 காலை துவங்கியது.
இன்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Afinah Honesters அணியும் Mohideen Rainers அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியில் Faams அணியும், Kayal Manchester அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
மூன்றாவது போட்டியில் Kayal Kings அணியும், Soccer Smashers அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
ஐந்தாம் நாளான இன்று மாலையுடன் முடிவுற்ற 28 போட்டிகளின் இறுதியில் அணிகளின் புள்ளி விபரங்கள்...
Faams கோப்பைக்கான வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் கால்பந்து நான்காம் சுற்று முடிவுகள்!
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நேற்று (22/04) காலை துவங்கியது.
இன்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் PAK HK அணியும் Kayal Kings அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியில் Kayal Manchester அணியும், Mohideen Rainers அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
மூன்றாவது போட்டியில் Afinah Honesters அணியும், Faams அணியும் விளையாடின.
இப்போட்டியில் Afinah Honesters அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
நான்காவது போட்டியில் Hameed Stars அணியினரை Soccer Smashers அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாம் நாளான இன்று மாலையுடன் முடிவுற்ற 16 போட்டிகளின் இறுதியில் அணிகளின் புள்ளி விபரங்கள்.
Faams கோப்பைக்கான வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் கால்பந்து 2017 : அணி வீரர்களின் குழு படங்கள்!
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நேற்று (22/04) காலை முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் Soccer Smashers, Kayal Manchester, PAK HK, Hameed Stars, Faams, Muhyideen Rainers, Afinah Honesters மற்றும் Kayal Kings ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இவ்வணிகளின் குழு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 27ஆம் தேதி வரை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நேற்று (22/04) காலை துவங்கியது.
இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் Soccer Smashers அணியும் Kayal Manchester அணியும் விளையாடின.
இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியில் PAK HK அணியும், Hameed Stars அணியும் விளையாடின.
இப்போட்டியில் Hameed Stars அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
மூன்றாவது போட்டியில் Faams அணியும், Muhyideen Rainers அணியும் விளையாடின.
இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
நான்காவது போட்டியில் Afinah Honesters அணியினரை Kayal Kings அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாம் நாளான இன்று காலை முடிவுற்ற 12 போட்டிகளின் இறுதியில் அணிகளின் புள்ளி விபரங்கள்...
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் இன்று (22/04) காலை துவங்கியது.
இன்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Hafinah Honesters அணியை Hameed Stars அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது போட்டியில் Faams அணியும், Kayal Kings அணியும் விளையாடிய போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
மூன்றாவது போட்டியில் Kayal Manchester அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் PAK HK அணியை வென்றனர்.
நான்காவது போட்டியில் Soccer Smashers அணியினரை Muhyideen Rainers அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
முதல் நாளான இன்று முடிவுற்ற 8 போட்டிகளின் இறுதியில் அணிகளின் புள்ளி விபரங்கள்...
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும், கடந்த ஆண்டு ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டியையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டி 2ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 22ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது...
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 9ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற " மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் சேர்க்கை வருகின்ற 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் மே 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
V-United Sports Club of Hong Kong is a dream come true but there is even more in store for the future. The club not only acts as a magnet for people in the local Indian community but also helps promote harmony and cooperation through friendly games with clubs from other communities in Hong Kong, including Chinese-based ones.
If you want to stretch your legs in the sports field and stretch your contacts in the local community.. think V-United
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 9ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற " மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்திலும்,
8ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் "மே மாதம் 15ஆம் தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள வீரர்களுக்கான சுயவிபரங்களை நிரப்பும் ஆன்லைன் படிவங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் போட்டியில் பங்கேற்கும் வகையில் காயல்பட்டினத்தில் இருக்க வாய்ப்புள்ளவர்கள் மட்டும் தங்களது விபரங்களை நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதி நாள் 2017 ஏப்ரல் 15. அதற்கு பின்னர் பூர்த்திசெய்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகிறோம்.
ஆன்லைன் விண்ணப்பங்களை பெற : http://application.vunited.org/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.
கால்பந்து போட்டி ஆரம்பமாகும் நாள் : இன்ஷாஅல்லாஹ் ”மே” 2
கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகும் நாள் : இன்ஷாஅல்லாஹ் ”மே” 15
போட்டிதொடர்பான மேலதிக விபரங்களுக்கு...
அலி ஃபைஸல் : 00 852 9754 0095
தஸ்லீம் : 00 852 9743 1898
சொளுக்கு முஹம்மது தம்பி : 00 91 98427 83160
ஜஹாங்கிர் : 00 91 99945 44632.
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 9ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற " மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்திலும்,
8ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் "மே மாதம் 15ஆம் தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள வீரர்களுக்கான சுயவிபரங்களை நிரப்பும் ஆன்லைன் படிவங்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டிதொடர்பான மேலதிக விபரங்களுக்கு...
அலி ஃபைஸல் : 00 852 9754 0095
தஸ்லீம் : 00 852 9743 1898
சொளுக்கு முஹம்மது தம்பி : 00 91 98427 83160
ஜஹாங்கிர் : 00 91 99945 44632
காயல்பட்டினம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மெருகேற்றவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் கடந்த 7 ஆண்டுகளாக, எல்லாம் வல்ல இறைவனின் துணையுடன், நமது ஊரின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடனும், வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் We Are United By Sports என்ற தாரக மத்திரத்துடன் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கடந்த 7 வருடங்களாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருந்து வந்தது.
அந்த இளம் வீரர்களின் ஆர்வத்தை அறிந்த நமது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், அவர்களுக்காக வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் ஜூனியர் போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் பள்ளி விடுமுறை நாட்களில் நடத்திட திட்டமிட்டுள்ளது.
இப்போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
போட்டி அறிவிக்கப்பட்ட தேதிகளில், போட்டி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் (மழை காலமாக இருப்பதால்) அதனையடுத்து வரும் பள்ளி விடுமுறை காலத்தில் போட்டி நடத்தப்படும்.
இப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்...
அலி ஃபைஸல் : 00852 97540095
தஸ்லீம் : 00852 97431898
அலாவுத்தீன் : 0091 9965974253
சாஹூல்ஹமீத் : 0091 9884145525
ஜஹாங்கிர் : 0091 9171776763
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 8 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 9ஆம் ஆண்டு கால்பந்து போட்டியையும், 8ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியையும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற "மே" மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் தேதி மற்றும் போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க புதிய அணிகள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு...
அலி ஃபைஸல் : 00 852 9754 0095
தஸ்லீம் : 00 852 9743 1898
சொளுக்கு முஹம்மது தம்பி : 00 91 98427 83160
ஜஹாங்கிர் : 00 91 99945 44632
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கைப்பந்து போட்டிகள் 2016 டிசம்பர் 30, 31 மற்றும் 2017 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது. டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் Kayal Manchester, Fi-Sky Boys, Sulthan Warriors மற்றும் RK Safwaa அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
2017 ஜனவரி 1ஆம் தேதி மாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் Sulthan Warriors அணியும், RK Safwaa அணியும் விளையாடியது. இப்போட்டியில் Sulthan Warriors அணி 15 - 5 என்ற புள்ளி கணக்கில் முதல் சுற்றையும், இரண்டாவது சுற்றை RK Safwaa அணி 15 - 11 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றிபெற்றன.
எனவே இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்ற முடிவு செய்யும் மூன்றாவது சுற்றில் பரபரப்பு ஏற்பட்டது, இறுதியில் Sulthan Warriors அணி 15 - 10 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், Fi-Sky Boys அணியும், Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Fi-Sky Boys அணி 15 - 9, 15 - 12 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Sulthan Warriors அணி 25 - 23, 25 - 13 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றிபெற்று வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு வீ-யூனைடெட் குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப் U.முஹம்மது நூகு தலைமைதாங்கினார், L.T.S.Gold House நிறுவனர் ஜனாப் சித்தீக் முன்னிலை வகித்தார், ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப். ஹாஜி இல்லியாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள்.
துவக்கமாக இறைமறை வசனத்தை சகோ. அலாவுத்தீன் ஓதினார், வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. M.A. மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்கள்.
பரிசளிப்பு விழாவின் துவக்கமாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற Kayal Manchester மற்றும் RK Safwaa அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை L.T.S. சித்தீக் அவர்கள் வழங்கினார்கள்.
வெற்றிக்கு முனைந்த அணியின் வீரர்களுக்கான நபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையை U.முஹம்மது நூகு அவர்கள் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையை ஹாஜி இல்லியாஸ் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரைக்குப்பின் தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சிகளை சகோ. காழி அலாவுத்தீன் தொகுத்து வழங்கினார்.
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மூன்றாம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைப்பந்து போட்டிகள் இன்று (30/12/2016) இரவு ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் துவங்கியது.
SMAK international, Fi-Sky Boys, Kayal Man u, Sulthan Warriors, Knight Riders மற்றும் RK Safwaa ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரின் முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்படுகின்றது.
இன்றைய முதல் போட்டி SMAK international அணியினரும் Fi-Sky Boys அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Fi-Sky Boys அணியினர்கள் 25 - 14 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது போட்டியில், Kayal Man u அணியினரும் Sulthan Warriors அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Sulthan Warriors 25 - 16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
மூன்றாவது போட்டியில், Knight Riders அணியினரும் RK Safwaa அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் RK Safwaa அணியினர் 25 - 15 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
நான்காவது போட்டியில், Kayal Man u அணியினரும் Fi-Sky Boys அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Fi-Sky Boys அணியினர் 25 - 21 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
ஐந்தாவது போட்டியில், Knight Riders அணியினரும் Sulthan Warriors அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Sulthan Warriors அணியினர் 25 - 23 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
ஆறாவது போட்டியில், SMAK international அணியினரும் RK Safwaa அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் RK Safwaa அணியினர் 25 - 19 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.
இன்ஷாஅல்லாஹ் நாளை (31/12/2016) மாலை 4:30 மணி முதல் மீண்டும் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது.
கோயம்புத்தூர், குனியமுத்தூர் அருகே, இடையர்பாளையம் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா பள்ளியில், இடையர்பாளையம் தனம் கால்பந்து அகடமி சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி இம்மாதம் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுகள் லீக் முறையிலும், அதில் அதிக புள்ளிகள் பெற்ற அணிகள் காலிறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றன.
10 வயதுக்குற்பட்ட பிரிவின் அரையிறுதிப் போட்டியில் தனம் கால்பந்து அகடமி அணியினர் ஈரோடு ஃபியூஸர் ஒலிம்பியாஸ் அணியை 4 -3 என்ற கோல் கணக்கிலும், காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் கோவை ஃபஸ்ட் கிக் அணியினரை 2 - 1 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவை தனம் கால்பந்து அகடமி அணியினரை வென்று ”தனம் கோப்பையை” வென்றனர்.
12 வயதுக்குற்பட்ட பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கோவைபுதூர் சுகி கால்பந்து அகடமி அணியினர் ராயல் கால்பந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கிலும், காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் கோவை தனம் கால்பந்து அகடமி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் கோவைபுதூர் சுகி கால்பந்து அகடமி அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் கால்பந்து அகடமி அணியை வென்று ”தனம் கோப்பையை” தட்டிச் சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
இப்போட்டித் தொடரின் சிறந்த வீரர்களாக 10 வயதுக்குற்பட்ட பிரிவில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் கால்பந்து அகடமியின் முஹம்மது இப்றாஹீம் என்ற வீரரும், 12 வயதுக்குற்பட்ட பிரிவில் சிறந்த வீரராக வஸீம் என்ற வீரரும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் இரண்டாம் ஆண்டு "FAAMS" கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 22ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் Afinha Honesters, Hameed Stars, Kayal Kings, Kayal Manchester, Mohideen Rainers, Muhyideen Rainers, PAK HK மற்றும் FAAMS ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இப்போட்டியின் முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்பட உள்ளது. அதன் இறுதியில் அதிக புள்ளிகளை பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும், இறுதிப்போட்டி இன்ஷாஅல்லாஹ் 27ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க 80 வீரர்கள் மட்டுமே தேவைபட்டது, ஆனால் 149 இளம் வீரர்கள் விண்ணப்பித்திருந்ததால் மீதமுள்ளவர்களுக்காக மர்ஹூம் ஹாஜி V.M.S. லெப்பை அவர்களின் நினைவாக இன்ஷாஅல்லாஹ் 26ஆம் தேதி காலை தனிபோட்டி நடத்தப்பட உள்ளது. அப்போட்டியில் Blossoms, Silvor, V-Diamond, V-Emerald, V-Exports, V-Forex, V-impex மற்றும் V-Sapphire ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிகள் நாக்கவுட் முறையில் நடத்தப்பட உள்ளது.
பயிற்சி மையம் (Academy) அளவில் 12 வயதுக்குற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்கும் ”தனம்” கோப்பைக்கான கால்பந்து போட்டி கோயம்புத்தூரில் இன்று (26/11/2016) முதல் நடைபெற்று வருகின்றது.
இந்த ஐவர் கால்பந்து போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 4 அணிகள் கொண்ட 4 குரூப்பாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்று முற்றிலும் லீக் முறையில் நடைபெறுகின்றது. ஒவ்வொறு பிரிவிலும் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று (25/11/2016) இரவு 8 மணியளவில் காயல்பட்டினம் ”வீ-யூனைடெட்" ஸ்போட்ஸ் அக்கடமியைச் சேர்ந்த 3 அணியினர்கள் வேன் மூலம் கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்படனர்.
அணி வீரர்களை ”வீ-யூனைடெட்” பயிற்சி மையத்தின் பொறுப்பாளர்கள் சகோ. ஜஹாங்கிர், சகோ. சொளுக்கு முஹம்மது தம்பி, சகோ. சேக் முஹம்மது, சகோ. ஜவஹர், பயிற்சியாளர் சகோ. இஸ்மாயில் மற்றும் இளம் வீரர்களின் பெற்றோர்கள் வழியனுப்பினார்கள்.
இன்று காலை நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற ”வீ-யூனைடெட்” அகடமி அணியினர் கோல் ஏதுமின்றி முதல் போட்டியை சமன் செய்துள்ளனர். தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 7 வீரர்கள் பங்கேற்கும் ”தமிழ் - தாய் கால்பந்து சாம்பியன் 2016” போட்டிகள் இம்மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் - ஹாங்காங், பேங்காங் பால் பிளஸ்டர்ஸ் - பேங்காங், ராம்நாடு வாரியர்ஸ் - பேங்காங், 7 ஸ்டார் - பேங்காங் மற்றும் பராம்ஸம் கால்பந்து கழகம் - பேங்காங் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்ற பேங்காங் பால் பிளஸ்டர்ஸ் – பேங்காங் அணியினர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் 7 ஸ்டார் அணியினர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
இவ்விருஅணியினருக்கும் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வீ-யூனைடெட் அணியினர் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இறுதி ஆட்டத்தில் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் - ஹாங்காங் அணியினரும், பேங்காங் பால் பிளஸ்டர்ஸ் - பேங்காங் ஆகிய இரு அணிகளும் சமபளத்துடன் விளையாடியது.
ஆட்டநேர இறுதியில் இரண்டு அணிகளும் கோல் தலா 1 கோல் அடித்து சமநிலைப் பெற்றதால், சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது, இதில் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ”தமிழ் - தாய் கால்பந்து சாம்பியன் 2016” கோப்பையை தட்டிச்சென்றனர்.
இப்போட்டித் தொடரின் சிறந்த வீரராக பேங்காங் பால் பிளஸ்டர்ஸ் அணியின் M.H. புஹாரி என்ற வீரரும், சிறந்த கோல்கீப்பராக வீ-யூனைடெட் அணியின் வாவு Z.A.யாஸர் என்ற வீரரும், சிறந்த வளரும் வீரராக 7 ஸ்டார் அணியின் அன்ஃபாஸ் ஹயாசூதீன் என்ற வீரரும், அதிக கோல்அடித்த வீரராக ராம்நாடு வாரியர்ஸ் அணியின் ஹாஸிம் ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பரிசளிப்பு விழாவில் துருக்கியைச் சேர்ந்த சகோ. இல்மாஸ் மற்றும் பேங்காங் தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் ஜனாப். ரஃபியூத்தீன், சகோ. அஷ்ரஃப், சகோ. சிராஜூத்தீன், சகோ. கியாஸ், சகோ. இமாம்அலி மற்றும் முன்னோடிகள் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணியினருக்கும், சிறப்பு வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.
இப்போட்டடிக்கான ஏற்பாடுகளை சகோ. M.H. புஹாரி தலைமையிலான பேங்காங் பால் பிளஸ்டர்ஸ் அணியினர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
காயல்பட்டினத்தின் கால்பந்து வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உருவாக்கும் எண்ணத்தில், முறையான பயிற்சிகளை வழங்குவதற்காக ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் "வீ-யூனைடெட் விளையாட்டு பயிற்சி மையத்தை" கடந்த மாதம் 28ஆம் தேதி முஹிய்யத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் துவங்கியது.
இப்பயிற்சி மையத்தை 28ஆம் தேதி மாலை 5:30 மணியளவில், முஹிய்யத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் திரு. இரத்தினசாமி அவர்களும், ஜனாப். ஃபஸூல்ஹக் அவர்களும் துவக்கி வைத்தார்கள்.
முதல் நாள் பயிற்சி வகுப்பில் 100-க்கும் அதிகமான இளம் வீரர்கள் உற்சாகமுடன் பங்கேற்றார்கள். இப்பயிற்சி வாரத்தின் மூன்று தினங்கள் (வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) என வாரத்திற்கு 4 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வயது அடிப்படையில் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 7 பயிற்றுனர்களை கொண்டு பிரத்தியேக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
"வீ-யூனைடெட் விளையாட்டு பயிற்சி மையத்தில்" இணைந்துள்ள வீரர்களின் திறமையை பரிசோதனை செய்வதற்காக பயிற்சி மையத்தில் இணைந்துள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
முதல் மாதம் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி மையம், அக்டோபர் மாதம் முதல், ஒரு மாதத்திற்கு ரூ.300 என்ற சலுகை கட்டணத்தின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. ”வீ-யூனைடெட் கால்பந்து பயிற்சி” வகுப்பில் இணைய விரும்புகின்ற 7 வயது முதல் 17 வயது வரையுள்ள இளம் வீரர்கள் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் வரவேற்கிறது.
மேலதிக விபரங்களுக்கு...
+852 9754 0095 - +852 9743 1898 - 98406 76767 - 98427 83160 - 91717 76763 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கடந்த 20ஆம் தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்ற காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று (29/05) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இப்போட்டியில் Kayal Tigers அணியும், Kid ‘N’ Mom அணியும் விளையாடியது. டாஸில் வெற்றிபெற்ற Kayal Tigers அணியினர் முதல் பந்துவீசுவதாக அறிவித்தனர். அதன்படி முதலில் மட்டைபிடித்தாடிய Kid ‘N’ Mom அணியினர் எதிரணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். தொடர்ந்து மட்டைபிடித்தாடிய Kayal Tigers அணியினர் 4.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு S.I. அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இறைமறை வசனத்தை தொடர்ந்து, வரவேற்புரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கு சால்லை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எல்.எஸ்.இப்றாஹீம், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் திரு. சிவகுமரன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பரிசளிப்பு விழாவின் துவக்கமாக போட்டித் தொடரின் சிறந்த மட்டையாளராக தேர்வு செய்யப்பட்ட Kid ‘N’ Mom அணியின் முஹம்மது அஸாருத்தீனுக்கு “BMW” மொபைல் பரிசும், சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட Kayal Tigers அணியின் அப்துல் பாஸித்துக்கு “BMW” மொபைலும், போட்டித் தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட Kayal Tigers அணியின் யாஸருக்கு Ferrari மொபைலும் வழங்கப்பட்டது. வளரும் இளம் வீரருக்கான பரிசை Fi-Sky Boys அணியின் அபூபக்கர் பெற்றார்.
வெற்றிக்கு முனைந்த Kid ‘N’ Mom அணியினருக்கு ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை, M.T. ஜெய்னுதீன், S.A.K. இஸ்ஸதீன், ஃபஸூலுல்ஹக், M.B.S. சுலைமான், S.I. அப்துல்காதர், L.S. அப்துல்காதர், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன், துணைச் செயலாளர் கிரிஸ்பின், ஞானி அபுல்ஹஸன், அப்துர்ரஹ்மான் மற்றும் வாவு W.S. சாஹூல்ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற Kayal Tigers அணியினருக்கு ரூ.17 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை சிறப்பு விருந்தினர் திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.
இறுதியாக S.A.K. இஸ்ஸதீன் நன்றியுரையாற்றினார்.
போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வல்லமைதந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவதாக நன்றியினை தொரிவித்துக் கொள்கிறோம். இந்த இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்து, இவ்விழாவிற்கு மேலும் மெருகூட்டிய சிறப்பு விருந்தினர்களுக்கும், போட்டிகள் நல்லமுறையில் நடைபெற மைதானம் தந்துதவிய காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தின் நிர்வாகிகளுக்கும். வீரர்கள் தந்துதவிய USC & KSC மைதானத்தின் பொறுப்பாளர்களுக்கும், போட்டிகள் நல்லமுறையில் நடைபெற நடுவர்களாக பணியாற்றிய நண்பர்களுக்கும், அணிகளை தந்துதவிய உரிமையாளர்களுக்கும், வீரர்கள் சேர்க்க படிவத்தை ஆன்லைனில் வடிவமைத்துதந்த சகோ. பாளையம் யூனுஸ் முஸ்தஃபா அவர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், போட்டிகள் சிறப்பாக நடைபெற ஒருங்கிணைப்புக்குழுவுடன் இணைந்து செயலாற்றிய, சகோ. லத்தீஃப், எஸ்.ஓ. மீரா சாஹிப், செய்யது இப்றாஹீம், நவாஸ், மஃசூக், இஸ்மாயில், மீரா லெப்பை, அப்துல் ஹமீத், யாஸர் அரஃபாத், எம்.எம். சாஹூல் ஹமீது, ஜூமானி மற்றும் இதில் தவறுதலாக யாருடைய பெயர்களும் விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும், அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்களின் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சிகளை M.M.சாஹூல்ஹமீது தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை M.ஜஹாங்கிர், M.A. ஜவஹர், சொளுக்கு முஹம்மது தம்பி மற்றும் வீ-யூனைடெட் குழுமத்தினர் செய்திருந்தனர்.